மனமுள்
(குறும்படத்தைப் பார்ப்பதற்கு படத்திலே சுட்டவும்)
இயக்கம்:- சுமதி
படத்தொகுப்பு: ரூபன்
நாடு:- இங்கிலாந்து
நேரம்:- 5:40 நிமிடங்கள்.
நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய சூழலில் வாழும் ஒரு பெண்பிள்ளையின் தந்தை தன் மனதில் முள்ளோடு இந்த சூழலைப் பார்க்கும் விதமே இந்தக் கதையின் கரு.
இக்குறும்படம் பற்றிய கண்ணோட்டங்களுக்கு இங்கே சுட்டவும்
1 Comments:
அன்பின் ஈழநாதனுக்கு
மனமுள் குறும்படம் பார்த்தேன். இது நான் பார்க்கும் இரன்டாவது குறும்படம். முதலானது, செருப்பு என்றொரு படம். காலுக்குச் செருப்பு கேட்கும் சிறுமி காலிழக்கும் கதை! இப்போதும் மனது கசிகிறது.)
மனமுள் படத்தின் கருவை பாதிப்படம் வரை என்னால் உணர்துகொள்ள முடியவில்லை. என்ன ஆகப்போகிறதோ என்கிற பதைபதைப்பே மெல்ல எழுந்து வருகிறது. இரு வேறு மனிதர்களை, குறைவாய் வரும் வசனங்கள் அழகாகப் பிரித்துக்காட்டுகின்றன. மொத்தம் 5 நிமிடப்படத்தில் மூன்று நிமிடங்கள் சாதாரணமாகக் கழியும் வேளையில் 'இதுவரை கதைக்கே வராமல் அடுத்த இரன்டு நிமிடத்திற்குள் என்னத்தைப் பெரிதாக்ச்சொல்லப்போகிறார்' என்றுதான் நினைத்தேன். ஆனால் படம் முடியும் பொழுதில் என் மனம் அதிர்ந்தது உண்மை.
இசை தனியாகப்போனாலும் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஏனெனில் வரப்போகும் அதிர்ச்சியை முன்பே ஏற்படுத்தி விடும் வகையில் இசை இல்லை. இது நல்ல உத்திதான்.
சுமதி ரூபன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வசனமும் காட்சியமைப்பும் நன்றாக இருக்கின்றன. (தூரத்தில் இருக்கும் கூரை வீடுகளைக் காட்டவில்லை என நினைக்கிறேன். காட்டியிருக்கலாமோ? வசனத்திற்குப் பலம் கொடுக்குமே என்று நினைத்தேன்! பின்னணியில் பெரிய வீடுகள் தெரிகின்றன. நன்று!)
கலக்கியிருக்கிறார் சுமதி ரூபன், எனது வாழ்த்துகள். தலைப்பு மிகபொருத்தம்!
Post a Comment
<< Home