சலனம்
சலனப்படங்களின் தொடர்ச்சியாய் கலையின் புதியதொரு வடிவமாக குறும்படங்கள் பிரபலமடைந்து வருகின்றன.இவற்றுக்குக் கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இளைஞர்கள் பலரும் குறும்படங்களைத் தயாரிக்கும் ஆவலுடன் களமிறங்கியுள்ளார்கள்.
தமிழ்க் குறும்படங்கள் தவழும் நிலையிலிருந்தாலும் விரவில் ஓடியாடும் நிலைக்கு வளர்ந்துவிடும் என்பது புதிதாக உருவாகும் குறும்படங்களிலிருந்து தெளிவாகின்றது.
வணிக நோக்கின்றி சமூகப் பிரக்ஞையுடன் எடுக்கப்படும் குறும்படங்களும் அவற்றை ஆக்குபவர்களும் பெருக வேண்டுமானால் அது பற்றிய தகவல்களும் தொழிநுட்ப உதவிகள் போன்ற செய்திகளும் பரவலாக்கப்படவேண்டும்.
அவ்வகையில் குறும்படங்களையும் அவை பற்றிய தகவல்களையும் இணைய வழி பரவலாக்கும் ஒரு சிறு முயற்சி இது.
0 Comments:
Post a Comment
<< Home